Agriculture & Environment

The Oorayam tree planting project was initiated, realizing the need to protect our environment. In protecting the environment, it is more important to bring about awareness about the environment among our people, than planting trees. Because it is easier to approach the challenge through the children, the project was first initiated in schools. It is easier to approach the schools which will help us implement the project, for organizations like ours, which are operating from abroad. It was also observed that by conducting activities in schools, such as art, speech and essay competitions, naming trees and celebrating their birthdays will enhance their awareness.

On 6th of September 2020, at Pandaitharippu Saanthai Chittrampalam primary school our first activity was ceremoniously begun by planting 25 shady tree plants and Hubal plants per person. By getting the corporation of Government Community Development officers, we were able to extend this project to public places like community centers etc. Our next target is to expand this project to Vanni and eastern province.

While going ahead with our project in our homeland, we have also set up and operating successfully, a WhatsAPP Group for us, comprising of members who are environmentally alert, knowledgeable together with responsible government officers. We are trying to make this a focal point by adding more persons of similar interest, to expand the tree planting campaign.

By the experience in this short interval of time, we have realized, that by this kind of effort to save the environment, we can help the upliftment of our motherland. More than that, it also has a happy outcome, as the environment is beyond the barriers of race, religion and language, it will form a bridge for everyone to live amicably.

With the sense of satisfaction, by the realization that we are contributing positively, towards catastrophe happening to the world, caused by the environment change, let us march firmly holding hand facing the future.

இயற்கையை நேசித்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்து உருவாக்கப்பட்டதே ஓராயம் மரம் வளர்க்கும் வேலைத்திட்டம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று வரும் போது, மரம் வளர்ப்பதை விட அது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மிக முக்கியமானது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, சிறுபிள்ளைகளூடாக அணுகுவது இலகுவாக இருக்கும் என்பதால் இத்திட்டம் முதலில் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இயங்கும் எம்போன்ற அமைப்பு தனது நடவடிக்கைகளை இலகுவாக நிர்வகிக்க, பாடசாலைகள் உதவும் என்பதும் ஒரு காரணமாகும். பாடசாலைகளில், சித்திரம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடாத்துவது, மரங்களுக்குப் பெயரிடுவது மற்றும் அவைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற நடவடிக்கைகளினால் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் எனவும் இனம் காணப்பட்டது.

எமது முதலாவது வேலைத்திட்டம், பண்டத்தரிப்பு சாந்தை சிற்றம்பலம் ஆரம்பப் பாடசாலையில் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் திகதி தலா 25 நிழல்தரு மரங்களும் மூலிகை மரங்களும் நடுவதன் மூலம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. அரச உத்தியோகத்தர்களான சனசமூக மேம்பாட்டு அதிகாரிகளின் (Community Development Officers) தொடர்பு எமக்கு கிடைக்கப் பெற்றதால், யாழ் மாவட்டத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கும் இத்திட்டம் பரவலாக்கப்பட்டது. இத்திட்டத்தினை வன்னிக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவு படுத்துவதே எமது அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

தாயகத்தில் வேலைத்திட்டத்தை நடாத்திக்கொண்டு இருக்கும் அதே வேளை எமக்கென்று ஒரு WhatsAPP Groupஐ உருவாக்கி அதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விற்பன்னர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அரச உத்தியோகத்தர்களை இணைத்துச் சிறப்பாக இயங்கி வருகின்றோம். மேலும் பல அங்கத்தவர்களைச் சேர்ப்பதன் மூலம், மரம் வளர்க்கும் திட்டத்திற்கு இதை ஒரு இணைப்பு மையமாக செயற்படுத்த முயற்சிக்கின்றோம்.

சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க முயலும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் தாயகத்தின் சமூக மேம்பாட்டிற்காகவும் உதவ முடியும் என்பதை இக் குறுகிய கால அனுபவத்தில் கண்டு கொண்டோம். அதற்கும் மேலாக, சுற்றுச்சூழல் என்பது இனம், மதம், மொழி என்பவற்றையும் கடந்து நிற்பதால் அங்கு வாழும் பல்லின மக்களின் ஒற்றுமைக்கும் இது ஒரு பாலமாக அமையும் என்பதே மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இன்று உலகம் எதிர் கொள்ளும் காலநிலை மாற்றம் என்ற பேரழிவை எதிர்கொள்ள, நாமும் எம்மாலான பங்களிப்பைச் செய்கின்றோம் என்ற உணர்வு எமக்கு மனநிறைவைத் தர, அந்த உற்சாகத்தில் அதற்கான இலக்கை நோக்கி எல்லோரோடும் கை கோர்த்து, திடமாகக் கால் பதித்து, நிதானமாகப் பயணிக்கின்றோம்.

Home Gardening
Tree Planting