Healthy Living
Introduction
As an adjunct of Oraayam, its “Healthy Living” division seeks to embark on initiatives aimed at promoting healthy living of our communities in the diaspora as well as those back home.
Healthy living involves the mind, body, food habits, and the environment. To maintain body health exercise is paramount. Maintenance of a healthy mind calls for Yoga training, imbibing teachings of intellectuals, reading good books, etc. Knowledge of the nature of the food consumed, its positive value, and harm is important to maintain good health; a peaceful family environment will ensure peace of mind.
Opportunity to seek frequent medical help shall help early detection and cure of ailments.
Through the “Healthy Living” division of the Oraayam is intended to function in the following areas:
- Provide service care for Child, Student, Youth, Elders & Seniors
- Physiological Needs for all age groups
- Awareness of Healthy Living
- Modern technological introduction for sports
- Support for Sports activities for all age groups
- Facilitate Mobile Medical Services
- Psychological counseling sessions for those suffering from Depression
Considering all these activities, we shall work to understand the local conditions and accordingly build a mentally strong and physically healthy community.
Oraayam shall collaborate with all Organizations and individuals engaged in the promotion of the well-being of our people back home.
Health is Wealth
Thank you
அறிமுகம்
எமது ஓராயம் அமையத்தின் சுகவாழ்வு (எமது ஓராயம் அமையத்தின் சுகவாழ்வு (எமது ஓராயம் அமையத்தின் சுகவாழ்வு (Healthy living) கட்டமைப்பினூடாக , நாம் எம் புலத்தில் வாழும் எம் உறவுகளுக்கும், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் உறவுகளுக்கும் , பயனுள்ள பணிகளைச் செய்திட விரும்புகின்றோம்.
சுகவாழ்வு என்பது மனம் , உடல் , உணவு, புறச் சூழல்கள் சம்பந்தப்பட்டது. உடல் நலமாக இருப்பதற்கு சிறந்த உடற் பயிற்சிகள் அவசியம். மனம் தெளிவாக இருப்பதற்கு மனவளக்கலை பற்றிய அறிவு , சிறந்த அறிஞர்களின் உரைகளை செவிமடுத்தல், நல்ல நூல்களை வாசித்தல்
என்பன அவசியம். உண்ணும் உணவின் தன்மை , அதன் நன்மை – தீமை பற்றிய போதிய அறிவு என்பன உடல்நலத்தைப் பேண உதவும். அமைதியான குடும்பச் சூழல் ஆரோக்கியமான மனநிலையைக் கொடுக்கும்.
அடிக்கடி எம் உடலை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வாய்ப்பிருப்பின் , நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய வைத்தியம் செய்து மாற்றிட வழியுண்டு.
அந்த வகையில் புலத்தில் ஓராயம் அமையம், அதன் சுகவாழ்வுக் கட்டமைப்பினூடாக, பின்வரும் வகையில் பணியாற்றிட விரும்புகின்றது.
- சிறுவர், மாணவர், இளைஞர், முதியோர் மற்றும் முதியோர்களுக்கான சேவைப் பராமரிப்பு
- அனைத்து வயதினருக்கான உடலியல் தேவைகள்
- ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு
- விளையாட்டு நவீன தொழில்நுட்ப அறிமுகம்
- அனைத்து வயதினருக்கான விளையாட்டு நடவடிக்கைகளுக்கான ஆதரவு
- நடமாடும் மருத்துவ சேவைகளை வசதிப்படுத்துதல்
- மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனை அமர்வுகள்
மேற்பட்ட செயற்பாடுகளுடன் , புலத்து நிலமைகளையறிந்து , அதற்கேற்ற வகையில் , மன வளத்தை – உடல் நலத்தைப் பேணி , சுகவாழ்வு மிக்க , சமூக கரிசனை மிக்க ஓர் சமூகத்தைக் கட்டி எழுப்பிட , ஓராயம் அமையம் செயற்படும்.
இந்தச் செயற்பாட்டில், தாயக மக்களின் சுகவாழ்விற்காக பணியாற்றிடும் அனைத்துத் தாபனங்கள் , தனிநபர் ஆளுமைகள் அனைவருடனும் சேர்ந்து பயணித்திட , ஓராயம் அமையம் முனைப்புடன் செயற்படும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி.